Wednesday, 2 September 2015

பறையர்கள் / நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள்.

பறையர்கள் / அத்தியாயம் 8
வட இந்தியாவில் ஆரியர் வருகை பல கட்டங்களில் ஏற்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக நாகர்கள் வடமாநிலங்களிலிருந்து தென்னோக்கிப் பரவத் தொடங்கினர். இதனால் இமயம் முதல் காஷ்மிர், தச்சிலா, கங்கைச் சமவெளிப் பிரதேசங்கள், பனாரஸ், பிகார், மேற்கிந்தியா, தென்னிந்தியா, இலங்கை வரை இவர்கள் நகர்ந்தனர். இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் பரவிய நாகர்கள் பெரும் ராஜ்ஜியங்களை ஆண்டவர்கள்.
டாலமியின் காலம் வரை (கி.பி.150) சோழ ராஜ்ஜியமும், காஞ்சியை ஒட்டிய பகுதிகளும் நாக குலத்தோரால் ஆளப்பட்டு வந்தன என்கிறார் சர்க்கார் என்பவர். சோழ, பாண்டிய நாடுகளில் நாகரின் செல்வாக்கை வெளிப்படுத்தும் நகரங்களான ‘உரகபுரம்’ என்றழைக்கப்பட்ட நகரங்கள் இருந்ததையும் இவர்கள் ஆதித்தமிழ்க் குடிகளுடன் இப்பகுதிகளில் கூடி வாழ்ந்தனர் என்பதையும் இவர் வலியுறுத்துகிறார்.
ஆதி சோழர்களுள் ஒருவரான முசுகுந்த சோழன் நாகர்களை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்தியபின் தமிழகத்தில் நாக அரசுகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. எனினும் காலப்போக்கில் சோழர்களும் நாகர்களும் இனக்கலப்படைந்ததைக் கூறும் கதைகள் சில சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாகர்களோடு சோழர்கள் கலப்படைந்து உருவாக்கிய பரம்பரையை ‘நாகபல்லவ சோழர்கள்’ என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) அழைப்பார். மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழர் குடிகளே என்பார் கனகசபைப்பிள்ளை.
தமிழகத்து நாகர்களின் வரலாற்றின்படி, இவர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர். இதன் பின்னரே தமிழகத்தில், நாக அரசுகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் பரவலாகக் கிடைக்கின்றன. அப்போது முதல் நாகர்கள் தமிழ்க் கலாசாரத்தைத் தமதாகத் தழுவிப் பேணித் தமிழரசுகளை அங்கீகரித்துக்கொண்டனர் எனத் தெரிகின்றது. அதனால் நாகர் வழிபாடுகள் சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. நாகர் குடிவந்த தமிழ்ப்புலவர் பலர் சங்க இலக்கியப் பாடல்களை இயற்றியவர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் இலங்கை நாகர்களும், தென்னிந்திய அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
0
நாகநாடு என்பது இலங்கைத் தீவின் வடபகுதிக்குப் பண்டைக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர். மகாவம்சத்தில் இந்தப் பகுதி நாகதீபம் எனறே கூறப்படுகிறது. நாகதீபம் என்பது தீவு அல்ல. மணிமேகலை நாக நாடு என்று கூறும் இலங்கையின் வட பகுதியைத்தான் மகாவம்சம் நாகதீபம் என்கிறது. நாகநாடு என்றும், நாகத்தீவு என்றும் ஏன் பெயர் பெற்றது என்றால், இங்கு நாகர் என்னும் இனத்தவர் அக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். தமிழ்நாட்டிலும் நாகர் இனத்தினர் இருந்தனர் என்பதனைச் சங்க நூல்களால் அறிகிறோம். ‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை.
நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள்.
கி.மு. 13ம் நூற்றாண்டு வாக்கில் கங்கைக்கும், யமுனைக்கும் இடையே உள்ள பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்திலிருந்து கேள்விப்படுகிறோம். திங்கள் மரபைச் சேர்ந்த ஆரியர்கள் தற்போது தில்லி இருக்குமிடத்தில் புதியதொரு துணைத்தலைநகரை அமைக்க விரும்பியபோது, அவ்விடத்தில் தங்கி வாழ்ந்த நாகர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
அர்ஜுனன் நாடு கடந்து வாழ்ந்த காலத்தில் முதலில் உலிபி என்ற நாக இளவரசியையும், அதன்பின் மணிபுரத்தை ஆண்ட நாக அரசன் சித்திரவாகனன் புதல்வியாகிய சித்திராங்கதையையும் மணம் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் நாகர்களை நாம் வரலாற்றில் கி.மு 6ம் நூற்றாண்டில் காண்கிறோம். அப்போது ஒரு நாக மரபினர் மகதத்தை ஆண்டனர். இம்மரபைச் சார்ந்த ஆளும் மன்னனாகிய அஜாத சத்துருவின் ஆட்சியிலேயே கௌதமபுத்தர் தம் புதிய கோட்பாட்டை வகுத்துரைத்தார். அது நாகர்களின் பேராதரவைப் பெற்றது.
இலங்கை வரலாற்று நூல்கள் யாவுமே நாகர்களைப் பற்றிய செய்திகளுடன் தொடங்குகின்றன. இவற்றிலிருந்து கி.மு. 6ம் நூற்றாண்டில் தீவின் மேற்குக் கரையில் வல்லமை வாய்ந்த நாக அரசுகள் நிலவின என்றும், அந்தக் காரணத்தால் தீவு ‘நாகத்தீவு’ என்று அழைக்கப்பட்டதென்றும் அறிகிறோம்.
1800 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பண்டைய அமராவதிச் சிற்பங்களிலும் அதுபோன்ற பிற இடங்களிலும் தலைக்குமேல் பின்புறமாக விரிந்த படங்களுடன் நாகங்கள் தீட்டப்பட்ட மனித உருவங்கள் உள்ளன. இவை நாகர் உருவங்களே. இந்தச் சிற்பங்களில் நாக அரசருக்குத் தனிச் சிறப்புச் சின்னமாகப் பின்புறம் ஐந்து தலை அல்லது எழு தலை நாகம் உள்ளது. நாக இளவரசியருக்கு இதுபோல முத்தலை நாகங்கள் உள்ளன.
ஆற்று வெளியிலேயே மனித நாகரிகம் முழுவளர்ச்சியடைந்தது. வேளாண்மை தலைத் தொழிலாயிற்று. இதில் வாழ்ந்தவர் வேளாளர் எனப்பட்டனர். இந்த வேளாளரிடையே அந்தணர், அரசர் அல்லது வீரர், வணிகர், உழவர் ஆகிய மூல வகுப்புகளும், பல கலைத் தொழில்களும், தொழில்களுக்கு உரிய கிளை வகுப்புக்களும் தோன்றின. குடியுரிமை மன்னரின் தலைவராக, முடியுரிமை மன்னரும் ஏற்பட்டனர். இம்மன்னர் ஆண்ட பேரூர் அல்லது நகரமும், கோட்டையும் அதைச் சார்ந்த சிற்றூர்களும் மலையும், காடும், ஆறும், கடற்கரையும் சேர்ந்து ஒரு நாடு ஆயின. இந்தத் தொடக்கக்கால நாட்டை மேனாட்டு வரலாற்று நூலாசிரியர் ‘நகர் நாடு’ என்பர். தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம் எனப்பட்டது.
நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும், நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.
நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், தலைசிறந்த பண்பாட்டு மக்களென மணிமேகலை கூறுகிறது. நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.
அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.
இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மைய, தென் இந்தியப் பகுதிகளிலும் நாம் நாகர்களைக் காண்கிறோம். குறிஞ்சிப் பகுதியில் குகைவாசிகளிடம் நாக வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும். நாக வழிபாடு முருக வழிபாட்டுடன் இணைக்கப்பட்டுப் பின்னர் முருகனும் ஆரிய சுப்ரஹ்மண்யனுடன் இணைந்தான். இன்றும் தன்னை வழிபடுவோர் முன் சுப்பிரமணியன் பாம்பாகத்தான் உருக்கொண்டு வருகின்றான்; பாம்பு கண்ணில் பட்டால் வேண்டுதலை முருகன் ஏற்றுக்கொண்டான் எனக்கொள்கின்றனர். நாக வழிபாட்டிலிருந்து சிவன், தான் அணியும் பாம்புகளைப் பெற்றான்.
நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று புராணங்கள் கூறும். ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள்.
கடித்தவுடன் கொல்லும் பாம்பு (நாகம்) உலகெங்கும் கடவுளாக வழிபடப்பட்டது. சிவன், விஷ்ணு வழிபாடுகள் உருவான பின்னரும் நாக வழிபாட்டினராகவே இருந்தவர் நாகர் என்று அழைக்கப்பட்டனர்.
நாகர் அரசுகளைவிடப் பழமை வாய்ந்த அரசுகள் எதுவும் இருந்ததில்லை என்று தோன்றுகிறது. காவிரிப்பட்டிணமும் நாகர்களின் பழைய வாழ்விடமாக இருந்தது என்று சொல்கிறார்கள்.
கி.பி. 150ல் டாலமி தனது நூலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆய நாட்டவர், கரையர், பாண்டியர், சோழர், பதோய் (பரதர்), அருவாளர், பசர் நாகர் போன்ற இனக்குழு மக்கள் பெயர்களையே குறிப்பிடுகிறார். இதில் பசர் நாகர் என்பது நாக இனத்தைக் குறிக்கிறது.
நாகர்களில் அயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய பல கிளையினர் இருந்தனர். இவர்களில் மறவரே மிக வல்லமை வாய்ந்தவராகவும், போர்த் திறன் மிக்கவராகவும் இருந்தனர். தமிழருக்குப் பெரும் பகைவராக விளங்கியவர்களும் இவர்களே. நாலைகிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.
நாக மரபினரிடையே எயினர் அல்லது வேடர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்க கொள்ளையும் கொலையுமே தொழிலாக இருந்தது. அவர்கள் அச்சம் தரும் காளியை வணங்கினர். தம் கொள்ளையில் துணையைப் பெற அவர்கள் காளி கோயில்களில் எருமைகளைப் பலியிட்டனர். சூறையாடுவதற்குப் புறப்படும் முன், அவர்கள் புட்குறிகளும் பறவைகளும் ஒலிக்குறிகளும் எதிர்ப்புகளும் பற்றிய அறிவுரை கேட்டனர். அவர்கள் மரபினர் இன்றும் அவர்கள் பண்புக்கேற்றபடி கள்ளர் அல்லது கள்வர் என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றனர்.
நாகரின் இன்னொரு மரபினர் ஒளியர். இவர்கள் கரிகால் சோழனால் வென்றடக்கப்பட்டனர் என்று தெரிகிறது. மாமல்லபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டில் அவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டுவரை கூட வலிமையுடன் இருந்தனர் என்று அறிகிறோம். ஒளி நாகரல்லாமலும், நாகரினத்திலேயே சங்க நாகர், முகுளிநாகர் ஆகிய பிரிவினர் 11ம் நூற்றாண்டில் இருந்தனர் என்று தெரியவருகிறது.
அருவாளர் என்பவர்கள் அருவாநாடு, அருவா வடதலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாகரின் இடச்சார்பான பெயர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோழர் வலிமையும், ஏனைத் தமிழரசர் வலிமையும் தாற்காலிகமாகச் சிலகாலம் தளர்வுற்றிருந்தது. அச்சமயம் அருவாளர் மரபினரின் கிளையினரான ஓவியர் எயிற்பட்டினத்தில் ஆண்டதுடன் மாவிலங்கையின் மன்னர்களாகவும் விளங்கினர்.
மேலங்கியின் அரசர் என்று டாலமியால் குறிப்பிடப்பட்ட பஸர்நாகர் பெரும்பாலும் இந்த ஓவியராகவே இருக்க வேண்டும்.
டாலமி கூற்றிலிருந்து சோழர் தலைநகராகிய உறையூரிலும், சோழர் குடிக்கும் நாகர் குடிக்கும் ஏற்பட்ட இனக்கலப்பின் மரபில் வந்த சோரநாகரே சோழர்களை அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியிருக்க வேண்டுமென்று கருத இடமேற்படுகிறது.
இதே காலத்தில் இலங்கையிலும் நாகர்கள் ஆட்சியுரிமையைக் கைப்பற்றியிருந்தனர் என்று கருதவேண்டியிருக்கிறது.
பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவு கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.

பறையர்: தொடக்கம்-வரலாறு : பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர்.


                                         
பறையர்
மொத்த மக்கள்தொகை
9,000,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா
மொழி(கள்)
தமிழ், மலையாளம்
சமயங்கள்
இந்து சமயம்,கிறித்தவம்,பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்


பறையர்அல்லது பெறவா என்போர் கேரளா, தமிழ் நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஒரு சமூகக் குழுவாகும்.  

பொருளடக்கம்

தொடக்கம்

பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.
2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். இவர்களது முக்கியத் தொழிலாக காணப்பட்ட பறையறிவித்தல் காரணமாக இப்பெயர் வழங்கியது. தமிழ் இலக்கியங்கள் இவர்களை பறை முழங்கும் குழுவாக இனங்காட்டுகிறது. சங்க இலக்கியங்களில் பறையர், பறை முழங்கும் மக்கள் குழுவினரிடயே காணப்பட்ட விசேட குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர்.

வரலாறு

சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர். பறையர்களில் ஒரு பிரிவினர் "வள்ளுவர்" என்று அழைக்கப்படுவர். இவர்கள் சோதிடத்திலும், மாயாஜாலங்களிலும் பெயர் பெற்று இருந்தனர். அரசர்களின் ஆலோசகர்களாகவும் இவர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.
கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.

மறையர் [பறையர்]

எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில, ஆதிதிராவிடர், என்ற சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் சாதியினர், முறையே மறையர்/மறையோர் , பறையர்/பறையோன், என்றபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்

பறையர் குடியிருப்பு

பறையர் குடியிருப்பு சேரி என்று இன்று அழைக்கப்படுகிறது. அழுக்குத் தெரு என்ற பொருளைத் தரும் Slum என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லாகவே சேரி என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. தூய்மையற்ற இடமே சேரி என்ற கருத்தாக்கம் மக்களிடம் இடம் பெற்றுள்ளதன் அடிப்படையில், சேரி வாழ்க்கை, சேரி மக்கள், சேரிப்பேச்சு என்ற சொற்களை இழிவான பொருளில்பயன்படுத்துகின்றனர். ஆனால் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பறைச்சேரி (தெ. இ. க; 4, க. எ. 529;52, 81, 83) (தெ. இ. க; 26, க. எ. 686) மேலைப்பறைச்சேரி (தெ. இ. க. தொகுதி2, க. எ. 5) என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ. இ. க. 26, க. எ. 686) பள்ளன் விருத்தி(தெ. இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ. இ. க. 4, க. எ. 529, 68, 79, 83, தெ. இ. க. உ. தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.

தொழில்


காவற் பறையன்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. [2]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். (IPS 843)
குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.
இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும்புலனாகிறது.
பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க. எ. 56)
மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

கல்வியறிவு

இம்மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தமையை சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். கொடை வழங்குவதைக் குறிப்பிடும்கல்வெட்டுக்களில் அதை வழங்குவோர் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டு வெட்டுவதற்கு முன்அச்செய்தியை ஓர் ஓலையில் எழுதிக்கொள்வர். கையெழுத்திடத் தெரிந்தவர்கள் இவ்ஓலையில் இவை என்னெழுத்து என்று எழுதிக்கையெழுத்திடுவர். கையெழுத்திடத் தெரியாதவர் எழுத்தாணியால் கீறுவர். இது தற்குறி எனப்படும். இவை என்னெழுத்து என்பதற்குப்பதில் இது இன்னார் தற்குறி என்று குறிப்பிடப்படும். அதன்பின்னர் தற்குறி மாட்டறிந்தேன் என்று குறிப்பிட்டு இது என்னெழுத்து என்றுஎழுதி, கையொப்பமிட தெரிந்த வேறொருவர் தன் கையெழுத்தை இடுவார். (ராசகோபாலன் 2001:94-95).
வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால் என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421)
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.(IPS 535)
மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவுஇல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.

வரி

சோழர் காலத்தில் பளு வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

பொருளாதார நிலை

நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.
கோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.
விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)

எதிர்க்குரல்

தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துக்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)
திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. "செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).

உதிரப்பட்டி

போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.
திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்

முதலி என்ற சொல் சாதியைக் குறிக்கும் சொல்லாக அல்லாமல் சாதி தலைவர் அல்லது அதிகாரியைக் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது முதலி, நாட்டு முதலி, தனியார் முதலி என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய முதலி பதவி பறையர்களிடமும்வழக்கில் இருந்ததை பறை முதலி என்ற சொல் உணர்த்துகிறது.
இதுவரை நாம் பார்த்த கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகள் பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
1. பறையர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களாக ஒரே காலகட்டத்தில் கருதப்படவில்லை. தீண்டாமைக் கொடுமை படிப்படியாகவேஅவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.
2. கல்வியறிவு உள்ளவர்களாகவும் சொத்துரிமை உடையவர்களாகவும் அவர்கள் விளங்கியுள்ளனர்.
மேலும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகளை தொகுத்து ஆராய்ந்தால் பறையர்கடந்த கால வரலாறு குறித்த பல புதியசெய்திகளைக் கண்டறிய முடியும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள்

  • நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவர்.

சமூக சிந்தனையாளர்கள்

  • அயோத்தி தாசர் பண்டிதர் (1845–1914), சாக்கிய புத்த சமூகத்தின் நிறுவனர்
  • இரட்டைமலை சீனிவாசன் (1860–1945), போராளி மற்றும் தமிழக அரசியல்வாதி
  • எம். சி. ராஜா (1883–1943), அரசியல்வாதி, போராளி.
  • ஜே. சிவசண்முகம் பிள்ளை (1901–1975),சென்னையின் முதல் மேயர், சுதந்திர இந்தியாவின் முதல் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதல் சபாநாயகர்
  • ந. சிவராஜ் (1892–1964), வழக்கறிஞர், அரசியல்வாதி, சென்னை நகர மேயராகவும் லோக் சபா உறுப்பினராகவும் இருந்தவர்
  • வைரன் டி.ராஜ், நிறுவனர், தலைவர் - நம்மவர் கழகம், மலேசியா
  • காம்ரேட் எம். செல்லமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில செயலாளர்
  • கேப்டன். எஸ். கலியபெருமாள், பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர்

அரசியல்வாதிகள்

  • வி. ஐ. முனுஸ்வாமி பிள்ளை, இந்திய தேசிய காங்கிரஸ், விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி. ராஜகோபாலச்சாரி அமைச்சரவை (1937–39).
  • பி. கக்கன், பொதுப்பணித்துறை, உள்துறை, விவசாயத்துறை அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ்.
  • மரகதம் சந்திரசேகர், இந்திய தேசிய காங்கிரஸ், திருவள்ளூர் தொகுதி மாநிலங்களவை உறுப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் (1951–1957), உள்துறை (1962–1964), சமூக நலத்துறை (1964–1967), முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் (1972).
  • எம். ஜி. பண்டிதன், நிறுவனர், அதிபர் "இந்திய முற்போக்கு முன்னணி", "மலேசியன் இந்தியன் காங்கிரசின்" முன்னாள் துணை அதிபர் , தபா மாநிலங்களவை உறுப்பினர் , தொழில் துறை பாராளுமன்ற செயலாளர், மலேசியா .
  • திருமாவளவன், முன்னாள் மக்களவை உறுப்பினர் , தலைவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.
  • பரிதி இளம்வழுதி, முன்னாள் தகவல் துறை அமைச்சர், தமிழ்நாடு.
  • யு. மதிவாணன், முன்னாள் பால் வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு.
  • டி. ராஜா, தேசிய செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி
  • ஜி. பழனிசாமி, மாநில துணை செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி
  • டி. ரவிக்குமார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி .
  • தலித் எழில்மலை, முன்னாள் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர், இந்தியா.
  • பாக்கியராஜ், தலைவர் - மக்கள் தேசம் கட்சி
  • ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தி.மு.க
  • பூவை மூர்த்தியார், ஜெகன் மூர்த்தியார், புரட்சி பாரதம் கட்சி

கலைஞர்கள்

  • சேரன் ஆட்டோகிராப்,நடிகர்[சான்று தேவை]
  • இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர்[சான்று தேவை]
  • வெங்கட் பிரபு, தமிழ் சினிமா இயக்குனர்
  • ஜெய், நடிகர்
  • பிரேம்ஜி அமரன், நடிகர்
  • பார்த்தீபன்,நடிகர் - புதிய பாதை
  • லிவிங்க்ஸ்டன், நடிகர்
  • லாரன்ஸ் ராகவேந்திரா, நடன இயக்குனர், நடிகர்[சான்று தேவை]
  • மிஷ்கின், இயக்குனர்
  • புவியரசன், புகைப்பட கலைஞர், பாடலாசிரியர்

இசைத் துறை

  • இளையராஜா — "சிம்போனி" இசையமைப்பாளர்
  • தேவா
  • கங்கை அமரன், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர்
  • யுவன் ஷங்கர் ராஜா — இசையமைப்பாளர்
  • சிவமணி — இசைக்கலைஞர்
  • கார்த்திக் ராஜா — இசையமைப்பாளர்
  • சிறீகாந்த் தேவா
  • சபேஷ் முரளி
  • பவதாரிணி — தேசிய விருது பெற்ற பாடகி

கல்வியாளர்கள்

இலக்கியம்

  • மீனா கந்தசாமி, சென்னையைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், புலவர், சமூகப் போராளி
  • சுகிர்தராணி கவிஞர், "இரவு மிருகம்" இவரின் முக்கியத் தொகுப்பு
  • ஜே. பி. சாணக்யா, சிறுகதையாசிரியர், கதா விருது பெற்றவர். கனவுப்புத்தகம் இவரின் முக்கியத் தொகுப்பு. ஆகச்சிறந்த தமிழ்ச் சிறுகதையாசிரியருள் ஒருவர்
  • கே. ஏ. குணசேகரன், கல்வியாளர்
  • ஜோதிராணி, கல்வியாளர்
  • ஸ்டாலின் ராஜாங்கம், கட்டுரையாளர்
  • ராஜ் கௌதமன், கட்டுரையாளர்
  • யாழன் ஆதி, கவிஞர்
[சான்று தேவை]

குறிப்பு:

தெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டு
க.எ.: கல்வெட்டு எண்
IPS: Inscripts of Pudukkottai State
பேரா. ஆ. சிவசுப்ரமணியன் அடித்தள மக்கள் வரலாறு, நாட்டார் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட கட்டுரைகளும் நூல்களும்எழுதிவருகிறார். தமிழ்நாடு கலை-இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.

மேற்கோள்கள்


இன்று (களப்)பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர்

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு.[சான்று தேவை] இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

சான்றுகள்

களப்பிரர் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன்(அச்சுத விக்கந்தக் களப்பாளன்). இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே.

ஆட்சிப் பகுதிகள்


தமிழர் வரலாறு

தமிழர் அரசியல் வரலாறு

தொல்பழங்காலத்தில் தமிழர்
தலைச்சங்கம்
இடைச்சங்கம்
கடைச்சங்கம் - சங்க காலம்
சேரர்
முற்கால சோழர்
முற்கால பாண்டியர்
களப்பிரர்
பல்லவர்
பிற்கால சோழர்
பிற்கால பாண்டியர்
இசுலாமியர் ஆட்சி
நாயக்கர் ஆட்சி
மராத்தியர் ஆட்சி
ஆங்கிலேயர் ஆட்சி
தமிழ்நாடு
தமிழீழம்

தமிழர் சமூக வரலாறு


தொகு
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

இனக்குழுமம்

சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.இருப்பினும் இன்று (களப்)பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருதுவோர் பலருண்டு.[2]. மேலும் இவர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும்[3], உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருத்துகள் நிலவுகிறது.(கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பிரர் என்று மறுவியது பின்னர் களப்பறையர் என மாறியது)

களப்பிரரும், களப்பாளரும்

தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.
  1. களவர் என்றும், களமர் என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உழவர்.
  2. வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
  3. களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
  4. களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சமணம்).[4]

மொழி

களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. "அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம்."[5] அதே வேளை இக்காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.[5]
இக்காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. எனினும், களப்பிரர்கள் ஆதரித்த பெளத்த சமய நூல்களும் பிற பல நூல்களும் பாலி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன.[5]

சமயம்

களப்பிரர்கள் வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள்.[5] இதர வைதீக எதிர்ப்புச் சமயமாகிய சமண சமயமும் இக் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும் இவர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு.[6] வரலாற்றாளர் அலைசு ஜஸ்டினா தினகரன் அவர்கள் இந்து சைவர்கள், சமணர் அல்லது பௌத்த சமயத்தினராக இவர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.
காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்.[7]

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

  • The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There, By M. Arunachalam, Published by University of Madras, 1979[8]
  • பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.

மேற்கோள்கள்


  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.

  • செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2002

  • பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.

  • மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250.

  • ஆ. பதமாவதி. களப்பிரர்கள் கால மொழி, எழுத்து, கலை, சமயம். மணற்கோனி. ஏப்ரல் 2011. 107

  • P. 146 Kerala State gazetteer, Volume 2, Part 1 By Adoor K. K. Ramachandran Nair

  • P. 150 and P. 152 The peacock, the national bird of India By P. Thankappan Nair

    1. Arunachalam, M. (1979). The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There (Original from the University of California, Digitized Jul 30, 2008 ed.). University of Madras. பக். 168.

    வெளி இணைப்புகள்

    Tuesday, 1 September 2015