பறையர் |
---|
மொத்த மக்கள்தொகை |
9,000,000[1] |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா |
மொழி(கள்) |
தமிழ், மலையாளம் |
சமயங்கள் |
இந்து சமயம்,கிறித்தவம்,பௌத்தம் |
தொடர்புள்ள இனக்குழுக்கள் |
தமிழர் |
பறையர்அல்லது பெறவா என்போர் கேரளா, தமிழ் நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஒரு சமூகக் குழுவாகும்.
பொருளடக்கம்
தொடக்கம்
பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். இவர்களது முக்கியத் தொழிலாக காணப்பட்ட பறையறிவித்தல் காரணமாக இப்பெயர் வழங்கியது. தமிழ் இலக்கியங்கள் இவர்களை பறை முழங்கும் குழுவாக இனங்காட்டுகிறது. சங்க இலக்கியங்களில் பறையர், பறை முழங்கும் மக்கள் குழுவினரிடயே காணப்பட்ட விசேட குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர்.
வரலாறு
சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர். பறையர்களில் ஒரு பிரிவினர் "வள்ளுவர்" என்று அழைக்கப்படுவர். இவர்கள் சோதிடத்திலும், மாயாஜாலங்களிலும் பெயர் பெற்று இருந்தனர். அரசர்களின் ஆலோசகர்களாகவும் இவர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.
மறையர் [பறையர்]
எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில, ஆதிதிராவிடர், என்ற சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் சாதியினர், முறையே மறையர்/மறையோர் , பறையர்/பறையோன், என்றபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்பறையர் குடியிருப்பு
பறையர் குடியிருப்பு சேரி என்று இன்று அழைக்கப்படுகிறது. அழுக்குத் தெரு என்ற பொருளைத் தரும் Slum என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லாகவே சேரி என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. தூய்மையற்ற இடமே சேரி என்ற கருத்தாக்கம் மக்களிடம் இடம் பெற்றுள்ளதன் அடிப்படையில், சேரி வாழ்க்கை, சேரி மக்கள், சேரிப்பேச்சு என்ற சொற்களை இழிவான பொருளில்பயன்படுத்துகின்றனர். ஆனால் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பறைச்சேரி (தெ. இ. க; 4, க. எ. 529;52, 81, 83) (தெ. இ. க; 26, க. எ. 686) மேலைப்பறைச்சேரி (தெ. இ. க. தொகுதி2, க. எ. 5) என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ. இ. க. 26, க. எ. 686) பள்ளன் விருத்தி(தெ. இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ. இ. க. 4, க. எ. 529, 68, 79, 83, தெ. இ. க. உ. தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.தொழில்
காவற் பறையன்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். (IPS 843)
குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.
இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும்புலனாகிறது.
பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க. எ. 56)
மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)
கல்வியறிவு
இம்மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தமையை சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். கொடை வழங்குவதைக் குறிப்பிடும்கல்வெட்டுக்களில் அதை வழங்குவோர் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டு வெட்டுவதற்கு முன்அச்செய்தியை ஓர் ஓலையில் எழுதிக்கொள்வர். கையெழுத்திடத் தெரிந்தவர்கள் இவ்ஓலையில் இவை என்னெழுத்து என்று எழுதிக்கையெழுத்திடுவர். கையெழுத்திடத் தெரியாதவர் எழுத்தாணியால் கீறுவர். இது தற்குறி எனப்படும். இவை என்னெழுத்து என்பதற்குப்பதில் இது இன்னார் தற்குறி என்று குறிப்பிடப்படும். அதன்பின்னர் தற்குறி மாட்டறிந்தேன் என்று குறிப்பிட்டு இது என்னெழுத்து என்றுஎழுதி, கையொப்பமிட தெரிந்த வேறொருவர் தன் கையெழுத்தை இடுவார். (ராசகோபாலன் 2001:94-95).வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால் என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421)
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.(IPS 535)
மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவுஇல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.
வரி
சோழர் காலத்தில் பளு வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.பொருளாதார நிலை
நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.கோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.
விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)
எதிர்க்குரல்
தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துக்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)
திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. "செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).
உதிரப்பட்டி
போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்
இக்கட்டுரையில் பிழையான தகவல்கள் இருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிப்பீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து, சீர் செய்வதைப் பற்றி இதன் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
இதுவரை நாம் பார்த்த கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகள் பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
1. பறையர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களாக ஒரே காலகட்டத்தில் கருதப்படவில்லை. தீண்டாமைக் கொடுமை படிப்படியாகவேஅவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.
2. கல்வியறிவு உள்ளவர்களாகவும் சொத்துரிமை உடையவர்களாகவும் அவர்கள் விளங்கியுள்ளனர்.
மேலும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகளை தொகுத்து ஆராய்ந்தால் பறையர்கடந்த கால வரலாறு குறித்த பல புதியசெய்திகளைக் கண்டறிய முடியும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள்
- நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவர்.
சமூக சிந்தனையாளர்கள்
- அயோத்தி தாசர் பண்டிதர் (1845–1914), சாக்கிய புத்த சமூகத்தின் நிறுவனர்
- இரட்டைமலை சீனிவாசன் (1860–1945), போராளி மற்றும் தமிழக அரசியல்வாதி
- எம். சி. ராஜா (1883–1943), அரசியல்வாதி, போராளி.
- ஜே. சிவசண்முகம் பிள்ளை (1901–1975),சென்னையின் முதல் மேயர், சுதந்திர இந்தியாவின் முதல் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதல் சபாநாயகர்
- ந. சிவராஜ் (1892–1964), வழக்கறிஞர், அரசியல்வாதி, சென்னை நகர மேயராகவும் லோக் சபா உறுப்பினராகவும் இருந்தவர்
- வைரன் டி.ராஜ், நிறுவனர், தலைவர் - நம்மவர் கழகம், மலேசியா
- காம்ரேட் எம். செல்லமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில செயலாளர்
- கேப்டன். எஸ். கலியபெருமாள், பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர்
அரசியல்வாதிகள்
- வி. ஐ. முனுஸ்வாமி பிள்ளை, இந்திய தேசிய காங்கிரஸ், விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி. ராஜகோபாலச்சாரி அமைச்சரவை (1937–39).
- பி. கக்கன், பொதுப்பணித்துறை, உள்துறை, விவசாயத்துறை அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ்.
- மரகதம் சந்திரசேகர், இந்திய தேசிய காங்கிரஸ், திருவள்ளூர் தொகுதி மாநிலங்களவை உறுப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் (1951–1957), உள்துறை (1962–1964), சமூக நலத்துறை (1964–1967), முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் (1972).
- எம். ஜி. பண்டிதன், நிறுவனர், அதிபர் "இந்திய முற்போக்கு முன்னணி", "மலேசியன் இந்தியன் காங்கிரசின்" முன்னாள் துணை அதிபர் , தபா மாநிலங்களவை உறுப்பினர் , தொழில் துறை பாராளுமன்ற செயலாளர், மலேசியா .
- திருமாவளவன், முன்னாள் மக்களவை உறுப்பினர் , தலைவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.
- பரிதி இளம்வழுதி, முன்னாள் தகவல் துறை அமைச்சர், தமிழ்நாடு.
- யு. மதிவாணன், முன்னாள் பால் வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு.
- டி. ராஜா, தேசிய செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி
- ஜி. பழனிசாமி, மாநில துணை செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி
- டி. ரவிக்குமார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி .
- தலித் எழில்மலை, முன்னாள் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர், இந்தியா.
- பாக்கியராஜ், தலைவர் - மக்கள் தேசம் கட்சி
- ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தி.மு.க
- பூவை மூர்த்தியார், ஜெகன் மூர்த்தியார், புரட்சி பாரதம் கட்சி
கலைஞர்கள்
- சேரன் ஆட்டோகிராப்,நடிகர்[சான்று தேவை]
- இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர்[சான்று தேவை]
- வெங்கட் பிரபு, தமிழ் சினிமா இயக்குனர்
- ஜெய், நடிகர்
- பிரேம்ஜி அமரன், நடிகர்
- பார்த்தீபன்,நடிகர் - புதிய பாதை
- லிவிங்க்ஸ்டன், நடிகர்
- லாரன்ஸ் ராகவேந்திரா, நடன இயக்குனர், நடிகர்[சான்று தேவை]
- மிஷ்கின், இயக்குனர்
- புவியரசன், புகைப்பட கலைஞர், பாடலாசிரியர்
இசைத் துறை
- இளையராஜா — "சிம்போனி" இசையமைப்பாளர்
- தேவா
- கங்கை அமரன், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர்
- யுவன் ஷங்கர் ராஜா — இசையமைப்பாளர்
- சிவமணி — இசைக்கலைஞர்
- கார்த்திக் ராஜா — இசையமைப்பாளர்
- சிறீகாந்த் தேவா
- சபேஷ் முரளி
- பவதாரிணி — தேசிய விருது பெற்ற பாடகி
கல்வியாளர்கள்
இலக்கியம்
- மீனா கந்தசாமி, சென்னையைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், புலவர், சமூகப் போராளி
- சுகிர்தராணி கவிஞர், "இரவு மிருகம்" இவரின் முக்கியத் தொகுப்பு
- ஜே. பி. சாணக்யா, சிறுகதையாசிரியர், கதா விருது பெற்றவர். கனவுப்புத்தகம் இவரின் முக்கியத் தொகுப்பு. ஆகச்சிறந்த தமிழ்ச் சிறுகதையாசிரியருள் ஒருவர்
- கே. ஏ. குணசேகரன், கல்வியாளர்
- ஜோதிராணி, கல்வியாளர்
- ஸ்டாலின் ராஜாங்கம், கட்டுரையாளர்
- ராஜ் கௌதமன், கட்டுரையாளர்
- யாழன் ஆதி, கவிஞர்
குறிப்பு:
தெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டுக.எ.: கல்வெட்டு எண்
IPS: Inscripts of Pudukkottai State
பேரா. ஆ. சிவசுப்ரமணியன் அடித்தள மக்கள் வரலாறு, நாட்டார் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட கட்டுரைகளும் நூல்களும்எழுதிவருகிறார். தமிழ்நாடு கலை-இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.
No comments:
Post a Comment